மொனராகலை, வெதிகும்புர அம்பிட்டிய பிரதேசத்தில் உயர்தர மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை, வெதிகும்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய உயர்தர மாணவியொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி தனது தாய் மற்றும் சகோதரியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ள நிலையில் சம்பவ தினமான 24 ஆம் திகதி உயிரிழந்த மாணவியின் தாயார் சகோதரியை மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, இந்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here