தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணக்கம் கண்டதையடுத்து, ஜூலை 6 ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் கெமுனு விஜேரத்ன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தற்போதைய குறைந்தபட்ச பேருந்து கட்டணமான ரூ. 30, ரூ. 34 ஆக அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டார்.

100 கி.மீ வரையிலான பயணங்களுக்கு 12% ஆல் கட்டணம் அதிகரிக்கப்படும் என இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 100 கி.மீ-க்கு மேற்பட்ட பயணங்களுக்கு 20% ஆல் கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here