அம்பாறை, கரங்கம பிரதேசத்தில் அனுமதியின்றி வீடொன்றினுள் புதையல் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி புதையல் தோண்டிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் குணசிறி அவர்களின் பணிப்புரையின் கீழ், ல் அதிகாரிகள் குழுவொன்று அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரங்கம பகுதியில் சோதனைகளை மேற்கொண்டது.

இச் சோதனையின்போதே வீடொன்றில் அகழ்வாராய்ச்சி மூலம் சுமார் 35 அடி ஆழத்தில் புதையல் தோண்டிய அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 47 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தண்ணீர் மோட்டார், ஹில்டி 1, கம்பி வடம் உள்ளிட்ட தோண்டும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைக்காக அம்பாறை பொலிஸ் நிலையத்திற்கு புதையல் தோன்ற பயன்படுத்திய உபகரணங்களுடன் சந்தேக நபர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here