களுத்துறை, பேருவளை நகரத்தில் உள்ள மின் உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலிருந்து 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவை, பாணந்துறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, குறித்த விற்பனை நிலையத்திலிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் 18 கையடக்கத் தொலைபேசிகள், 02 மடிக்கணினிகள் மற்றும் 03 தொலைக்காட்சி பெட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மூவரும் களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here