16 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு TikTok, Snapchat மற்றும் Instagram உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்களை  பயன்படுத்த தடை விதிக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

சிறுவர்களை இணையங்களில்  பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், இரவு நேரங்களில் தொலைபேசியை பயன்படுத்துவதை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் முழுமையான தடை விதிக்கப்படுவதே சரியான தேர்வு என்று தெரிவித்த பிரதமர் ஸ்டார்மர், குழந்தைகளின் நலனை பாதுகாக்க இது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த புதிய விதிகள், இந்த வருட தொடக்கத்தில் சமூக ஊடக கட்டுப்பாடுகள் தொடர்பில் இங்கிலாந்து அரசாங்கம் நடத்திய கலந்தாய்வை தொடர்ந்து வந்துள்ளன. குறித்த ஆய்வில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் எவ்வாறான மாற்றம் தேவை என கேட்கப்பட்டது.

பெரும்பாலான மக்கள் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், வேறு ஏதேனும் நோக்கத்திற்காக இவ்வாறான  நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் அது சிக்கல்களை ஏற்படுத்தும் என சிலர் எச்சரித்துள்ளனர். (BBC)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here