கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22, 38 மற்றும் 55 வயதுடைய இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து 10 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினும் மற்றய இருவரிடமும் இருந்து 05 கிராம் 100 மில்லிகிராம் மற்றும் 05 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







