தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஊவா மாகாண மேல் நீதிமன்றம் 14 ஆண்டுகளின் பின்னர் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
பதுளை கெந்தகொல்ல கிராமத்தில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி திஸாநாயக்க முதியன்சேலாகே சந்திரவதி (35) என்பவரை படுகொலை செய்தமைக்காக அவரது கணவர் சுலைமான் தர்மதாசவிற்கு எதிராக பதுளை பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மனைவிக்கு வேறு தொடர்பு இருப்பது உறுதியானதையடுத்து, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே மனைவியின் காலில் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.








