வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – புத்தளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (04.09) இடம்பெற்றுள்ளது. சிலாபத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

லுனுவில பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, வேன் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here