234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது. தேர்தலில் 85.10 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தலில் பதிவான வாக்குகள் எதிர்வரும் 4 ஆம் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திமுக, அதிமுக, தவெக நாம் தமிழர், ஆகிய கட்சிகள் மத்தியில் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நான்காம் திகதி வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ள நிலையில் வாக்கெண்ணும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
வாக்குகளை எண்ணுவதற்காக மாநிலம் முழுவதும் 62 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் ஐந்து மத்திய நிலையங்கள்களும் சேலம் கடலூரில் தலா 4 மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.








