2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘வாழ’ படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது.

இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வாழ 2’ கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி வெளியானது.

பாடசாலை கால கதையை மையமாக வைத்து உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளதோடு தமிழிலும் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாழ 2 படம் 28 நாட்களில் இந்திய மதிப்பில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் மோகன்லாலின் தொடரும் படத்தின் வசூலையும் முந்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விஸ்வன் ஸ்ரீஜித் இயக்கத்தில் ‘வாழ 3’ படைப்பும் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here