கொழும்பு கிராண்ட்பாஸ், மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 முதல் 32 வயதுக்குட்பட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவரிடம் இருந்து 25 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றைய இருவரிடமிருந்தும் 11 கிராம்  09 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 11 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here