ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களது கிளிநொச்சி மாவட்டத்தின் காரியாலயங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில் தர்மபுரம் பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சுந்தரகுமார் அவர்களினால் (09.09.2024) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் காரியாலயம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தருமபுரம் பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம் முருகேசு சந்திரகுமார் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
காரியாலயம் திறப்பு விழாவின் பின்னர் கட்சி தொண்டர்கள் முன் நிலையில் அவர் உரையாற்றினார். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








