சர்க்கரை வியாதி வந்துவிட்டால் இனிப்பு வகைகள் உண்பதை நிறுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஒரு சிலர் சொக்லெட் பிரியர்களாக இருப்பார்கள். ஆனால் சர்க்கரை வியாதியின் காரணமாக அவர்களால் சொக்லெட் சாப்பிட முடியாமல் இருக்கும்.
ஆனால், சரியான சொக்லெட்டை தெரிவு செய்து உண்டால் அது சர்க்கரை அளவை அதிகரிக்காது.
சொக்லெட்டில் டார்க் சொக்லெட், வயிட் சொக்லெட், மில்க் சொக்லெட் என மூன்று வகை உண்டு.
இதில் டார்க் சொக்லெட்டில் 70-85 சதவீதம் கொக்கோ சொலிட்ஸ், அதிகளவான நார்ச்சத்து, மிகக் குறைந்தளவு சர்க்கரை ஆகியவை உள்ளன.
மில்க் சொக்லெட்டில் 35-55 சதவீதம் கொக்கோ சொலிட்ஸ், கொக்கோ பட்டர், பால், சர்க்கரை ஆகியவை உள்ளன.
அதேசமயம் வயிட் சொக்லெட்டில் கொக்கோ பட்டர், பால், சர்க்கரை மட்டும் உண்டு கொக்கோ சொலிட்ஸ் கிடையாது.
இந்த மூன்று வகை சொக்லெட்டுகளில் டார்க் சொக்லெட் தான் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.
இதில் உள்ளடங்கியிருக்கும் பொலிபெனால்ஸ், ப்ளாவனால்ஸ், தியோபுரோமின், நைட்ரிக் ஒக்சைட் உற்பத்தியை அதிகரித்து ரத்த நாளங்களை தளர்த்தி இரத்த அழுத்தத்தை குறைத்து இதயம் நன்றாக செயற்படுவதற்கு உதவி செய்கிறது.
அதுமட்டுமின்றி டார்க் சொக்லெட்டில் உள்ள கொக்கோவில் பொட்டாசியம், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம் போன்றவை உள்ளடங்கியுள்ளன.
டார்க் சொக்லெட் சாப்பிடுவதால் இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவு குறைகிறது.
இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்துகிறது.
மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 20 கிராம் வரையில் டார்க் சொக்லெட் சாப்பிடலாம்.








