12 ராசியினருக்குமே அவர்களுக்கென்று தனிச் சிறப்புக்கள் உள்ளன. ஆனால் இவற்றில் ஒரு சில ராசியினர் தங்கள் வாழ்க்கைத் துணைக்காக எதுவேண்டுமானாலும் செய்வார்களாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அவர்களின் தன்னலமற்ற கருணைக்கு பெயர் போனவர்கள். இதனை மற்றவர்கள் சாதகமாக பயன்படுத்தாத வண்ணம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் தங்கள் துணையை மிகவும் அன்போடு பார்த்துக் கொள்வார்கள்.
கன்னி
இவர்கள் உறவுகளின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். தங்கள் துணையின் தேவைகளை மதிப்பிடவும் அவற்றை செயற்படுத்தவும் பாடு படுவார்கள்.
துலாம்
அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் கிரகமான வீனஸின் ஆட்சியின் கீழ் இருக்கும் துலாம் ராசியினர், தங்கள் உறவிலும் அதனைப் பேணுகிறார்கள். இவர்கள் இயல்பாகவே தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.
தனுசு
உறவுகளில் மிகவும் அன்பானவர்கள். தங்கள் அன்புக்குரியவர்களை பாசத்துடனும் கவனத்துடனும் பார்த்துக் கொள்வதில் துரிதமாக செயல்படுவார்கள்.
மீனம்
மீன ராசியினர் தன்னலமற்றவர்கள். தங்கள் துணையின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வார்கள். தங்கள் அன்புக்குரியவர்களின் மகிழ்ச்சிக்காக அவர்களது தேவைகளை ஒதுக்கி வைப்பார்கள்.





