மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் கூட்டத்திற்கு ஆதரவு தேடி நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் உட்பட குழுவினர் இன்று திங்கட்கிழமை (16) மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து துண்டுபிரசுரம் விநியோகித்து பிரச்சார நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

கல்லடியில் உள்ள மீன் பூங்காவிற்கு அருகிலுள்ள மைதானத்தில் நாளை சனிக்கிழமை (17) பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் மாபெரும் பிரச்சார கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு மக்கள் அலைகடல் போல வருமாறு அழைப்பு விடுத்து இந்த பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரியுமும் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டுபிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனர் என எமது பிராந்திய செய்தியாளார் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here