ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி உறுதிப்படுத்தியதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.








