Monday, November 23, 2026
No menu items!

கலால் திணைக்களம்

மதுபானசாலைகளுக்கு பூட்டு..!

மதுபானசாலைகள் இன்று (25.12.2024) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என்று கூறப்படுகிறது. இதன்படி, குறித்த சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உரிமம்..!

ரூ.5.7 கோடி கூடுதல் கட்டணம் செலுத்தாததால், டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உரிமம் நாளை (05) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. கட்டணம் செலுத்தாவிட்டால் அனைத்து மதுபான உரிமங்களும் 31ஆம் திகதிக்குப் பிறகு புதுப்பிக்கப்படாது என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி உறுதிப்படுத்தியதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மது போத்தல்களுக்கு புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர்..!

மதுபான போத்தல்களுக்கு புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒன்றை ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஸ்டிக்கர் முறையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

11 நாட்கள் இறைச்சி மற்றும் மதுபான கடைகள் பூட்டு…!

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, நாளை (10.08) முதல் பதினொரு நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலும் மற்றும் அதனைச் அண்மித்துள்ள  அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. பெரஹரா வீதி பவனி வரும் 10ம் திகதி தொடக்கம் 20ம் திகதி பெரஹரா  தினத்தன்று வரை மதுபானக்கடைகள் மூடப்படும் எனவும், மேலும் குறித்த அக்காலப்பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில்...

ஒருதொகை பீடி இலைகள் மீட்பு!

புத்தளம் - எரம்புகொட களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினர் குறித்த பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை சோதனைக்குட்படுத்திய போது அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த லொறியில் 21 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 689...

எசல பண்டிகைக்காக மதுபானசாலைகள் பூட்டு..!

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை இன்று (06) ஆரம்பமாகியுள்ளது, இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று(06) முதல் ஜூலை 22ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (06)...
- Advertisement -spot_img

Latest News

இந்தியா நேபாளத்திற்கு 1.62 பில்லியன் டொலர் உதவி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2026 மார்ச் மாதம் பதவியேற்றதிலிருந்து தனது முதல் இருதரப்பு வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர...
- Advertisement -spot_img