9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது.
இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும்.
வாக்களிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்குக்கொண்டு செல்லப்படும்.
இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 39 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்களில் மொஹமட் இல்யாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில் 38 பேர் இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது 35 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இம்முறை அந்த எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.
இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கடமைகளை மேற்கொள்வதற்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.








