இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அனைத்து மீனவர்களையும், பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அவர்களின் அனைத்து படகுகளையும் நல்லெண்ண மற்றும் நேச சமிக்ஞையாக இலங்கை ஜனாதிபதி விடுவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அவ்வாறான நடவடிக்கை இலங்கைக்கு ஒரு புதிய திசையை வழங்கும் அவரது நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த 37 மீனவர்களையும் விடுதலை செய்வதன் மூலம் சிறந்த ஆரம்பத்தை வழங்க முடியும் எனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
80 மீனவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுடன் தனது கடல் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளது ஆனால் எந்த நாடும் இலங்கையைப் போலத் தனது அயல்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதலை மேற்கொள்வதில்லை கைதுசெய்வதில்லை, அபராதம் விதிப்பதில்லையெனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நீங்கள் ஆட்சிப்பொறுப்பில் இருக்கின்றீர்கள் புதிய ஆரம்பம் குறித்து வாக்குறுதியளித்துள்ளீர்கள்.
உங்கள் அதிகாரத்தினை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா கோரியுள்ளார்.