கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04) 123.50 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக  கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 12,053.49 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டன.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் மொத்த புரள்வு 2.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக  கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

2024 ஜூலை 3ஆம் திகதிக்கு பிறகு அனைத்து பங்கு விலைச்சுட்டணெ் 12,000ஐ கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here