ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் ஜப்பான் மொழி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி வீதி, ஹொரனை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஜப்பான் மொழி ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 3,967,500 ரூபா  மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (06.10) ஹொரனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here