எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலைநகர் கொழும்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்குவது தற்போதைய காலத்தின் தேவை.
அந்தவகையில் இம்முறை முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் மற்றும் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான ARV லோஷனும் களம் காணுகின்றனர்.
ஒரு கட்டத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைநகர் கொழும்பில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்து குரல் கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அப்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்யும் கொடியவர்களால் அதன் ஒரு குரல் இல்லாமல் செய்யப்பட்டது.
அதற்கு பிறகு தமிழர்களுடைய இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக தலைநகர் கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு பிரதிநிதித்துவம் ஒன்றை மாத்திரம் பெறக்கூடிய நிலையில் இருந்தனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் புதிய புதிய முகங்கள் அறிமுகமாகிய போதிலும் அவர்களுடைய வெற்றி எட்டாகனியாகவே இருந்தது. காரணம் தமிழர்களை பிரித்தும் பிரிந்தும் ஆளும்தன்மையை பெரும்பான்மையினர் கையாண்டிருந்தனர்.
இந்த நிலையைமாற்ற ஜனாநாயக மக்கள் முன்னணியின் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் இரண்டு பிரதான வேட்பாளர்களாக மனோ கணேஷன், ARV லோஷன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டி இடுகின்றனர். இவர்களில் இருவரையும் வெற்றிபெறவைத்து நாடாளுமன்றம் அனுப்புவது எம் கடமையாகும்.
ஏனென்றால் தலைநகர் கொழும்பில் தமிழ்பேசுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இலங்கையின் தலைநகர் தமிழ் பேசுகின்றவர்களுக்கும் சொந்தமானது என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச்செல்லும் ஒரு நடவடிக்கையாகவே அமையும் .
எனவே தமிழ்பேசுகின்ற நாங்கள் கட்டாயம் இம்முறை இவ் இருவருக்கும் வாக்களிக்க வேண்டியது அல்லது வாக்களிக்க சொல்வது எம் இனத்தின் இருப்பை உறுதிசெய்யும் ஒரு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.
ஆக்கம் – ஆரோக்கியன்.








