சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பன்ன இன்டர்சேஞ்சை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெலிப்பன்ன வெளியேறும் மற்றும் நுழைவு வீதிகள் தற்போது முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அந்தந்த சந்திப்பில் இருந்து போக்குவரத்து நுழைவது மற்றும் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








