காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும்நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ்  சூரியமின்கல யானை வேலி அமைக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பூநகரி கமநல சேவை நிலையத்திற்குற்ப செம்மன் குன்று பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த திட்டமிடமானது வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகிறது.

கிளிநொச்சியில் பூநகரி, அக்கராஜன்குளம்,முழங்காவில் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான வேலைத்திட்டத்தினை செம்மன் குன்று பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில்  காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி சாம்பசிவம் கேசிகா ,பூநகரி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here