ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கென்தலியத்தபாலுவ பிரதேசத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் (திமிங்கலத்தின் வாந்தி) தொகையுடன் சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (25.10.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம, கென்தலியத்தபாலுவ பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 10 கிலோ நிறையுடைய அம்பர் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.








