ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் CHEC Port City Colombo (Private) Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Xiong Hongfeng ஆகியோருக்கிடையில் நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

எதிர்பார்க்கப்படும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய உத்திகளை மையமாகக் கொண்டு, கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தும் வகையில், CHEC Port City Colombo (Private) Limited ஆனது ரூ. 03 மில்லியன் நன்கொடையாக அளித்தது.

CHEC Port City Colombo (Private) Limited நிறுவனத்தின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் Xian Nan (Neo) அவர்களும் சந்திப்பில் கலந்துகொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here