Tuesday, April 21, 2026
No menu items!

நந்திக சனத் குமாநாயக்க

மியன்மாருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கிய அரசாங்கம்..!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) நேற்று (10/04/2025) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்,...

அரச வைத்திய அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வைத்தியர்களின் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு அமைவான இம்முறை பாதீடு திட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும், தொழில்சார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வைத்தியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...

சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கான புதிய திட்டம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகளை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க நேற்று (30) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ​​ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் இலங்கையின் விரைவான சுற்றுலா வளர்ச்சியை எடுத்துரைத்ததுடன், புதிய சுற்றுலா வலயங்கள் மற்றும் அரசாங்க ஒத்துழைப்பு உள்ளிட்ட துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டமிடப்பட்ட திட்டங்களை...

கொள்கலன்  பிரச்சினைக்கான தீர்வு!

துறைமுகத்தில் நிலவும் கொள்கலன் நெரிசல் பெப்ரவரி மூன்றாம் வாரத்திற்குள் முழுமையாக தீர்க்கப்படும் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திர புத்தாண்டு விடுமுறை காரணமாக சீனாவில் இருந்து கொள்கலன் இறக்குமதியை...

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு!

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும்...

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா மற்றும் லரீனா அப்துல் ஹக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (06.01.2025) ஜனாதிபதி செயலகத்தில்...

ஜனாதிபதியின் செயலாளருக்கும், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு…!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் CHEC  Port City முகாமைத்துவப் பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் CHEC Port City Colombo (Private) Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Xiong Hongfeng ஆகியோருக்கிடையில் நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. எதிர்பார்க்கப்படும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய உத்திகளை மையமாகக் கொண்டு, கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து...

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கிடையிலான சந்திப்பு…!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது குறைவாக உள்ள போதிலும், தேவை...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img