அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிகவதலந்த பிரதேசத்தில் விலையுயர்ந்த 05 மாணிக்கக் கற்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (30)கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
அரலகங்வில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.
குழி தோண்டும் போது இந்த மாணிக்கக் கற்கள் கிடைத்துள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








