தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 11 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (08.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 364 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவர்களில் 11 பேர் பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் ஆவர்.

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு இதுவரை 340 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவற்றில், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 54 முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 286 முறைப்பாடுகளும் காணப்படுகின்றன.

சந்தேக நபர்களிடமிருந்து 94 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 50 இலட்சத்துக்கும் அதிகமான சட்டவிரோத சுவரொட்டிகள் , 458 பேனர்கள், 1,322 கடவுட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here