Wednesday, April 29, 2026
No menu items!

நிஹால் தல்துவ

ஓமந்தை ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவிப்பு..!

யாழ்ப்பாணத்திற்கான ஏ-9 பிரதான வீதி ஓமந்தை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி, வாகன சாரதிகள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அல்லது மதவாச்சி, செட்டிக்குளம், மன்னார் ஆகிய மார்க்கங்களில் யாழ்ப்பாணத்தை அடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...

அர்ச்சுனாவிற்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை – நிஹால் தல்துவ தெரிவிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு  எதிராக சிஐடியினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர் முகநூலில் பதிவு செய்த கருத்து தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர்...

காவல்துறையினர் பொது மக்களுக்கு விடுத்த கோரிக்கை…

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைதியாகச் செயற்படுமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த நாட்களில் தேர்தல் சட்ட விதிகளை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்…

நாடளாவிய ரீதியில் 1,3421 வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் அமைய பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிஸ் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்களித்தன் பின்னர் வீடுகளுக்கு செல்லுங்கள், பொது இடங்களில் ஒன்று சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்...

அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலி!

அம்பலாங்கொட, உரவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின்படி தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பிற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில்…!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 90,000 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இக்குழுவில் 63,145 பொலிஸ் அதிகாரிகள், 3200 விசேட அதிரடிப்படை அதிகாரிகள், தேவைக்கு ஏற்ப பொலிஸ் அதிகாரிகள் அகற்றப்படும் இடங்களில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் இராணுவத்தினர் உட்பட 11,000...

பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் 11 பேர் கைது…!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 11 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (08.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 364 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ...

சுற்றுலா வலயங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்…!

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு பணியில் பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறுகம்பே, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அறுகம்பேயில் உள்ள சுற்றுலாத் தலங்கள்...

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குள் பதற்ற நிலை!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் போலி முகவரியிலிருந்து கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றமையை அடுத்து இன்று (25) அங்கு பதற்றநிலை காணப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டதுடன், அங்குப் பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், ஊடகங்களுக்கு பதிலளித்த  காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை…!

7 வழக்குகளுக்கான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் ​போதே அவர் இதனைக் குறிப்பிட்டனார். 2015 சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், தினேஷ் ஷாப்டர் மரணம் உள்ளிட்ட 7 வழக்குகளுக்கான...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img