FILE - In this image provided by the U.S. Army, soldiers, from the 3rd Battalion, 321st Field Artillery Regiment of the 18th Field Artillery Brigade out of Fort Bragg N.C., conduct live fire testing at White Sands Missile Range, N.M., on Dec. 14, 2021, of early versions of the Army Tactical Missile System. (John Hamilton/U.S. Army via AP, File)

ரஷ்யாவைத் தாக்குவதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை யுக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.

அமெரிக்க அதிகாரி ஒருவர் இதனை உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பல மாதங்களாக, யுக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ஏடி ஏசி எம் எஸ் (ATACMS) எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில், தற்போது யுக்ரைனுக்கு தமது சொந்த எல்லைகளுக்கு வெளியே தாக்குவதற்கு அமெரிக்காவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தமக்கு எதிரான போரில் யுக்ரைன் மேற்கத்தேய நாடுகளின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்துமாயின் அது நேட்டோ இராணுவ கூட்டணி, நேரடியாகப் போரில் பங்கேற்பதாக அமையும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here