மலையாளத் திரையுலகின் பிரபல நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் இன்று (19) இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கை வந்த நடிகர் மோகன்லாலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகில் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் இயக்குனர் என மோகன்லால் பன்முகம் கொண்டவராவார்.
அண்மையில் நடிகர் மோகன்லால், கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








