நாட்டின் படையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களாக அனுப்புவதில் தாம் ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கை, ஐ.நா.விடம் கூறியுள்ளது.
அனைத்து வீரர்களுக்கும் ஐ.நா. சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும், மேலும் எந்தவொரு தவறான செயலையும் விசாரணை செய்ய கடுமையான அமைப்புகள் செயல்படும் என்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற விமான பிரிவின் துணைத் தளபதி சம்பத் துயகோந்த, ஐ.நா. தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவர் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 22) அன்று, அரசியல் மற்றும் சமாதானப் பணிகளுக்கான ஐ.நா.வின் உயர் அதிகாரியான காலித் கியாரியை சந்தித்தார்.
இலங்கையின் ஐ.நா. தூதுவர் ஜயந்த ஜயசூரிய உட்பட ஏனைய இலங்கை அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போதே, ஐ.நா.வின் சமாதானப் பணிகளுக்காக நாட்டின் படைகளை அனுப்ப இலங்கை தயாராகி வருகிறது என இந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஐ.நா. பணிகளுக்காகத் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் மனித உரிமைகளுக்கான விடாமுயற்சிக் கொள்கை (HRDDP), சர்வதேச மனிதாபிமானச் சட்டம் (IHL), சர்வதேச மனித உரிமைகள் சட்டம் (IHRL), தொடர்பாக முழுமையான பயிற்சி அளிக்கப்படும் என இலங்கை பிரதிநிகள் தெரிவித்துள்ளார்.
மேலும் வீரர்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதில் இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் பங்கு குறித்தும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.








