2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது.
யுத்தம் காரணமாக ஈரான் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரூபியோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஈரான் அணி விளையாடும் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுமாறு ஈரான் கோரியது, எனினும் ஃபிஃபா (FIFA)அதனை நிராகரித்துள்ளது.
கால் பந்து உலகக் கிண்ண போட்டியானது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் ஜூன் 11, 2026 அன்று தொடங்குகிறது.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின.
ஈரான், பதிலடி வழங்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு மில்லியன் கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அது இன்னும் நீடிக்கிறது.
இந்த நிலையில் கால்பந்து உலக கிண்ணம் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.








