புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கான பிரதியமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய பிரதியமைச்சர்களின் பெயர் விபரங்கள் கீழே…

அதனடிப்படையில்,

1.    பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

2.    நாமல் கருணாரத்ன – விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்

3.    வசந்த பியதிஸ்ஸ – கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்

4.    நலின் ஹேவகே – தொழிற்கல்வி பிரதி அமைச்சர்

5.    ஆர்.எம். ஜயவர்தன – வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்

6.    கமகெதர திஸாநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்

7.    வழக்கறிஞர் டி.பி. சரத் – வீட்டுவசதி பிரதி அமைச்சர்

8.    ரத்ன கமகே – மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர்

9.    மஹிந்த ஜயசிங்க – தொழிலாளர் பிரதி அமைச்சர்

10. அருண ஜயசேகர – பாதுகாப்பு பிரதி அமைச்சர்

11. அருண் ஹேமச்சந்திர – வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

12. அன்டன் ஜெயக்கொடி – சுற்றாடல் பிரதி அமைச்சர்

13. எம்.முனீர் – தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர்

14. பொறியியலாளர் எரங்க வீரரத்ன – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்

15. எரங்க குணசேகர – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

16. சதுரங்க அபேசிங்க – கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்

17. பொறியியலாளர் ஜனித் ருவான் கொடித்துவக்கு – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்

18. கலாநிதி நாமல் சுதர்ஷன – மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்

19. ருவன் செனரத் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்

20. கலாநிதி பிரசன்ன குமார குணசேன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

21. டாக்டர் ஹன்சக விஜேமுனி – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

22. உபாலி சமரசிங்க – கூட்டுறவு அபிவிருத்தி

23. ருவன் சமிந்த ரணசிங்க – சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்

24. சுகத் திலகரத்ன – விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

25. சுந்தரலிங்கம் பிரதீப் – பெருந்தோட்ட மற்றும் கிராம அபிவிருத்தி பிரதி அமைச்சர்

26. சட்டத்தரணி சுனில் வட்டகல – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர்

27. கலாநிதி மதுர செனவிரத்ன – கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்

28. கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

29. கலாநிதி சுசில் ரணசிங்க – காணி மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here