தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்கவின் வாகனம் நேற்று (26.11.2024) மாலை நாடாளுமன்ற வளாகத்திலுள்ள குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சம்பவம் இடம்பெற்ற போது வைத்தியர் அபேசிங்க வாகனத்தில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினரை ஏற்றிச் செல்வதற்காக சாரதி வந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here