அமெரிக்காவில் இம் மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் அடுத்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கெபினட்டில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுக்கு வன்முறை மற்றும் உயிருக்கு ஆபத்து போன்ற மிரட்டல் வந்துள்ளது. அவர்களுடன் வசிப்பவர்களுக்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது என டிரம்ப் மாறுதலுக்கான (Trump transition- ஆட்சி அதிகாரம் மாறுதல்) செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சட்ட அமுலாக்க மற்றும் பிற அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவாக செயல்பட்டனர். டிரம்ப் மற்றும் நியமிக்கப்பட்டவர்களும் அவர்களின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

மேலும் நியூயார்க்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எலிஸ் ஸ்டெபானிக் உள்ளிட்டோருக்கும் மிரட்டல் வந்துள்ளது. இவர் ஐ.நா.வின் அடுத்த தூதராக செயல்பட இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here