அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை களையும் வரை இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து வாபஸ் பெறப்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (ஞாயிறு)  தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 9 அன்று அமைச்சரவை கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, இதனை “போலியான” ஆயுத களைவு செயல்முறை என வர்ணித்தார்.

ஹமாஸ் உண்மையாக ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறப்படும் என அவர் உறுதியாக கூறினார்.

இசுரேலின் இந்த நிலைப்பாடு, ட்ரம்பின் பரந்த காசா அமைதி முயற்சிகளின் அடுத்த கட்டத்தை முன்னெடுப்பதற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம், ஹமாஸ் மற்றும் பிற ஆயுத குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். “அமைதி சபை” மூலம் உருவாக்கப்பட்ட 15 அம்ச ஆவணத்தின் ஒரு பகுதியாக இது காணப்பட்டது.

இருப்பினும், ஆயுத களைவு மற்றும் இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறுதல் இதன் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன.

இதேவேளை இஸ்ரேல் முதலில் காசாவில் இருந்து வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னரே ஆயுத களைவு குறித்து பேச முடியும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை களைவது மற்றும் காசா பகுதி ஆயுதமற்றதாக்கப்படுவது ஆகியவற்றிற்கு பின்னரே வாபஸ் நடவடிக்கை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிகாரிகளுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், சில முன்மொழிவுகள் இஸ்ரேலுக்கு ஏற்புடையவை, சில ஏற்புடையவை அல்ல என்றும் நெதன்யாகு கூறியுள்ளார்.

பரந்த காசா கட்டமைப்பில் ஹமாஸ் ஆயுத களைவு, இஸ்ரேலிய படைகள் வாபஸ், காசாவின் மறுசீரமைப்பு மற்றும் பாலஸ்தீன சிவில் நிர்வாகத்தின் கீழ் ஆட்சி ஆகியவை அடங்கும். பாதுகாப்புக்கு உதவ சர்வதேச படை ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபரில் போர் நிறுத்தம் எட்டப்பட்ட போதிலும், இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம்சாட்டி வரும் நிலையில் இஸ்ரேலிய தாக்குதல்கள் காசாவில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here