சளிப்பிடித்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்த 3 மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை தெமடபிட்டிய தம்மிக்ககம பகுதியைச் சேர்ந்த எச்.ஜி. தில்ஹானி என்ற 3 மாத பெண் குழந்தையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தென்னை நார் ஆலை ஒன்றில் பணிபுரியும் தம்பதிகள் எனவும், இந்த குழந்தை அவர்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணமான குழந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்ததும், குழந்தை பெற்றோருடன் வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்ததும் குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம், பால் போன்ற திரவம் வடிந்திருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.








