2025 மார்ச் 31 வரை பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடனை செலுத்தத் தவறியதால், அவர்களின் சொத்துக்களை ஏலம் விடுவது இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்றைய தினம்(10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 04 வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியானது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனைத் தீர்ப்பதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். .








