வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாக தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருவது தொடர்பாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வைத்தியர் பவானந்தராஜா ஆகியோர் வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடல் இன்று (09) பாரளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது வடக்கு மாகாணத்தில் ஐந்து தொழிற்பேட்டை நிலையங்களை அமைப்பதற்காக காணிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது ஆர்வமுள்ளவர்கள் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக தங்கள் செயற்திட்டங்களை முன்வைக்க முடியுமென குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று நீண்ட காலமாக புலம்பெயர்ந்து நாட்டுக்கு வர முடியாமலிருக்கும் தமிழர்கள் தாங்கள் நாட்டுக்கு வர விரும்புவது தொடர்பான ஆர்வத்தை பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here