உலக அயலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று தமிழகம் செல்கின்றார்.

உலக அயலகத் தமிழர் மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் சென்னையில் இடம்பெறவுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பிற்கமைய இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ள பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் நிலவரங்கள் தொடர்பில் விளக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மாநாட்டில், இலங்கை, இந்தியா, மொரிசியஸ், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலகெங்கிலும் வாழும் சாதனைத் தமிழர்கள், உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here