இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (9) நிராகரித்தார்.

இந்த தண்டனைக்கு எதிராக தேரர் மேல்முறையீடு செய்துள்ளதால், மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை தேரரை பிணையில் விடுவிக்க ஞானசார தேரரின் வழக்கறிஞர்கள் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here