எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையுமாறு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் 27ஆவது பொதுச்செயலாளராக நேற்று பதவியேற்றதன் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு சென்று 50 நாட்களின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டுமென தாம் கூறியிருந்ததாகவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
இதனை பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டதாகவும், அதனால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








