அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டது.

ஜனாதிபதி ஜோ பைடன் முதல் முறையாக அந்த உயரிய விருதை வழங்கினார்.

போப் பிரான்சிசிடம் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி பைடன் இந்த விருதை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஏழை மக்களுக்கு சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நீங்கள் காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வளர்ச்சி, பண்புகள், பாதுகாப்பு, உலக அமைதி போன்றவற்றில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு ஜனாதிபதியின் மெடல் ஆப் பிரீடம் விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here