தேசிய தைப்பொங்கல் விழாவானது இன்றைய யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்கா தேவி தேவஸ்தானத்தில் இடம்பெற்றது.

இன்று (1/19/2025) காலை 7.30 மணி அளவில் தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தானத்தில் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்று அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை சென்று அங்கு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன் போது இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, யாழ்ப்பாண துணைத்தூதுவர் சாய் முரளி, புத்தசாசன் கலாச்சார அமைச்சர் கலாநிதி ஹனிதும சுணில் செனவி, கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர்களான மகிந்த ஜெயசிங்க, சுந்தரலிங்கம், பிரதி அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஶ்ரீபாவனந்தராஜா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சைவநெறிச்சுடர் என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் போது கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

மற்றும் மறைந்த கலைப்பேராளுமை ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் (குழந்தை) அவர்களுக்கும் புத்தசாசன அமைச்சரால் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here