வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ் இதனை உறுதி செய்துள்ளார்.

7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 1 நிமிட இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் 1900 ஆம் ஆண்டுக்கு பிறகு 7.5 ரிக்டர் அளவில் வெனிசுலாவைத் தாக்கிய மிக வலுவான நிலநடுக்கம் இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்டின் கராகஸ் மற்றும் லா குவைரா மாநிலத்தில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும்  100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் மக்கள் தெருக்களில் இருப்பதாகவும் ஐ நா தெரிவித்துள்ளது.

இதேநேரம் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மொத்த உயிரிழப்பு ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here