2024 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்த சோதனைகளுக்கமைய, 23, 953 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தங்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் நீதவான் நீதிமன்றங்களால் 207 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கடந்த ஆண்டில் 24 ,761 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதில் அதிக கட்டணம் வசூலித்தல், தயாரிப்பு தகவல்களை தவறாக சித்தரித்தல், விலைகளை காட்சிப்படுத்த தவறியமை, மின் சாதனங்களுக்கு உத்தரவாதங்களை வழங்காதமை மற்றும் நியாயமற்ற சூழ்நிலையில் பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.








