யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஐங்கரன் தெரிவித்தார்.
ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று முன்தினம் முதல் வகுப்பு புறக்கணிப்பை ஆரம்பித்தது.







