சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்நத 38 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கர் கசோல் மேல் பிரிவு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று (6)  உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here